|
Apr 03
2013
|
என்னது காந்தி செத்துட்டாரா?! - கைபுல்லைகள்Posted by mohankumar in விஜயதாரணி , பிரின்ஸ் , vilavancode , vijayadharani , tncongress , prince , gandhiji , defeatcongress , congress-MLA , AICC |
தமிழக காங்கிரஸில் உள்ள சட்டமன்ற உறுபினர்களில் ஒருவர் விஜயதரனி. தற்போது அதிக அளவில் தொலைகாட்சிகள் நட்த்தும் விவாத நிகழ்சிகளில் பங்கேற்று வருபவர். விலை உயர்ந்த சொகுசு காரில் உலா வருபவர். அரசியலில் உயர் நிலையை பெற விரும்பும் இவர் சமீபத்தில் சட்டசபையில் தமது காங்கிரசு கட்சியை பற்றி அடிப்படியான விசயத்தில் தவறான பதிலை அளித்து தங்களது அறிவு திறனை நிருபித்துள்ளனர். (இவரது தொகுதியை கேரளாவுடன் இணைக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தியது வேறு ஒரு முக்கிய கிளைக்கதை.)
தமிழக சட்டப்பேரவையி்ல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுகையில், " சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போது, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி குறுக்கிட்டு இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு, "மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியையே கலைத்து விட வேண்டுமென்று கூறினார்" என்று சொன்னார்.

