ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றினார், மேலும் இத்தீர்மானம் ஏக மனதாக தமிழக சட்டசபை உறுப்பினர்களின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டது, மேலும் தமிழகம் (தூத்துக்குடி) இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு சமீபத்தில் துவங்கியது, இலங்கை தமிழர்களை கொன்றழித்து போற்குற்றங்களை செய்திருக்கும் வேளையிலும், ஐ நா சபையினால் போர்குற்றம் நிருபிக்கப்பட்டிருக்கும் வேளையிலும், இப்போக்குவரத்து தமிழர்களின் மனவேதனையை மேலும் அதிகபடுத்தும் என்றும், kasyno இபோக்குவரத்தை இந்திய அரசு ரத்து செய்யும்படியும் தமிழக முதல்வர் கேட்டுகொண்டார்.
இப்படி இருக்கும் தருணத்தில், இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்கு அரசு தொலைக்காட்சியான பொதிகை தொலைகாட்சி உதவி வருகிறது. சென்ற வாரம் சனி கிழமை (18-6-2011) 9.30 மணிக்கு சுற்றுலா வாங்க என்ற நிகழ்ச்சியில், அனுராதபுரம், இலங்கைக்கு சுற்றுலா வாங்க என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இது அரைமணி நேர நிகழ்ச்சியாகும், இதில் சிங்கள பாடல்களும், சிங்கள நாட்டுபுற நடனங்களும் ஒளிபரப்பபட்டது, இது இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்காகவும் பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவும் பொருட்டே ஒளிபரப்பபடுகிறது. இது தமிழர்களின் மனதை நோகடிகாதா? இத்தகைய நிகழ்ச்சியை, தமிழக அரசு இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் வேளையில் ஒளிபரப்பப்படுமாயின், தமிழக அரசின் தீர்மானத்தை மதிக்காமல், அதை எதிர்க்கும் பொருட்டே ஒளிபரப்பப்பட்டது என கூறலாம், பொதிகை தொலைகாட்சி தமிழர்களுக்கான தொலைக்காட்சியா அல்லது சிங்களர்களுக்கு உதவும் தொலைகாட்சியா?
இந்த நிகழ்ச்சிய பற்றி எந்த ஒரு ஈழ ஆதரவு இயக்கமோ, கட்சியோ கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. பொதிகை தொலைகாட்சியின் இத்தகைய செயல், கண்டிக்க தக்க செயல் இல்லையா?